faithfullyasean
புரிந்துணர்வு, மரியாதை, நம்பிக்கை ஆகியவை ஆசியான் அமைப்புக்கு முக்கியம்: அதிபர் ஹலிமா
Seithi | Vasantham | 3 December 2018

புரிந்துணர்வு, மரியாதை, நம்பிக்கை ஆகியவை ஒன்றுபட்ட சமுதாயத்துக்கும் ஒருமித்த ஆசியான் அமைப்புக்கும் முக்கியமான அம்சங்கள்.
அவற்றை மேம்படுத்த ஆக்ககரமான கலந்துரையாடல் சிறந்த அடித்தளமாய் விளங்குவதாக அதிபர் ஹலிமா யாக்கோப் கூறியுள்ளார்.
Faithfully Asean நிகழ்வின் தொடக்கத்தில் அவர் பேசினார்.
அந்தந்தச் சமூகங்களின் தலைவர்களாக அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும், அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டும், தேவைப்படுவோருக்கு உதவவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
பொதுவான அம்சங்களின் அடிப்படையில் நாடுகள் நம்பிக்கையையும் புரிந்துணர்வையும் ஆழமாக்கிக்கொள்ளமுடியும் என்று அதிபர் ஹலிமா தெரிவித்தார்.
ஆசியான் நட்பு நாடுகளுடன் சேர்ந்து பணியாற்றுவதில் சிங்கப்பூர் கடப்பாடு கொண்டிருப்பதாக அவர் சொன்னார்.
தகுதிக்கு முன்னுரிமை, சமயச் சகிப்புத்தன்மை, பலஇனச் சமுதாயம் ஆகியவை சிங்கப்பூரின் இணக்கமிக்க சூழலுக்கு அதிமுக்கிய அம்சங்கள் என அதிபர் ஹலிமா தெரிவித்தார்.